மதுரை மாவட்டம் பேரையூர் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் திருப்பதி என்பவரிடம் பேரையூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்க புஷ்பம் என்ற பத்திர எழுத்தர் தனது மகளின் திருமணத்தை பதிவு செய்து சான்று பெற விண்ணப்பித்திருந்தார். திருமண சான்று பெற வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் பெயர், முகவரியில் உள்ள திருத்தங்களை சரி செய்து வழங்குமாறு சார் பதிவாளர் கேட்டுக் கொண்ட நிலையில் அவசரமாக இந்த திருமண சான்று தேவைப்படுகிறது. உடனடியாக பதிவு செய்து கொடுங்கள் என பத்திர எழுத்தர் தங்க புஷ்பத்தின் கணவர் கேசவராஜா சார் பதிவாளர் திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பத்திர அலுவலகத்தில் இருந்த பூட்டை எடுத்து தலை பகுதியில் தாக்கியதில் காயம் ஏற்பட்டதால் உடனே பேரையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் பேரையூர் காவல் நிலையத்தில் சார்பதிவாளர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து
பேரையூர் காவல் நிலைய போலீசார்
பத்திர அலுவலகத்தில்
சார் பதிவாளர் திருப்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கேசவராஜா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.