சென்னை: ஜூன் -17.தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் காவல்துறை
யும் இணைந்து விடுதிக்குள் நடக்கும் திருட்டு குற்றல்களை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டம் சோழிங்கநல்லூர் முகமது சதக் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
பள்ளிக்கரணை துணை ஆணையர் கௌதம் கோயல்,
செம்மஞ்சேரி உதவி ஆணையர் ஆர். வைஷ்ணவிசெம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை உதவி ஆணையர் வைஷ்ணவி
விடுதிக்குள் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் முறைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
ஒரு அறையில் மூன்று பேருக்கு வெவ்வேறு நேரங்களில் வேலை செய்யும் காணத்தாலும்,
கதவுகள் எந்நேரமும் திறந்தே இருப்பதாலும் வெளியாட்கள் லேப் டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எளிதாக திருடி செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே
விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராகள் சென்சர் பொருத்திய கதவுகள் அமைக்க வேண்டும் .
புதிதாக விடுதியில் தங்குபவர்களின் ஆதார் அட்டை , பணிபுரியும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை சிபாரிசு செய்வோரின் விவ.ரங்கள் அடங்கிய நகல்களை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் .
வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோர்களின் பணி விவரங்களை கண்டிப்பாக சேகரித்து வைக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் குற்றங்களை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ. சீதாராமன் தெரிவித்ததாவது:-
காவல்துறை ஆணையர் வைஷ்ணவி கூறியது போல் இனிமேல் எங்கள் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா, சென்சார் கதவுகள் பொருத்தப்படும். தங்குபவர்களின் விவரங்கள் , கண்டிப்பாக குறித்து வைக்க அனைத்து விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். குற்றங்கள் தடுக்கவும், குர்றவாளிகளை கண்டறிய அனைத்து ஒத்துழைப்பை தருவோம் என உறுதியளிக்கிறேன்.
மேலும் தங்கும் விடுதிகள் வணிக ரீதியானது அல்ல நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
‘
இதை கருத்தில் கொள்ளாமல் மின்கட்டணம், குடிநீர் வரி, மாநகராட்சி வரி, ஜி.எஸ்.டி பழைய நிலையே தொடர்கிறது.
தங்கும் விடுதிகள் வணிக கட்டிடங்கள் அல்ல என்று 2019 ஆம் ஆண்டு நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அரசு துறைகள் அத்தீர்ப்பை கடைபிடிக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக எங்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இதை தமிழக அரசு முறை படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் ஆர்.வி சுப்பையா, துணைத்தலைவர் ஆர்.ஸ்ரீநிவாசலு,, இணைச் செயலாளர்கள் லகா .ஸ்ரீனிவாசலு, பி.சின்னராஜா, பொருளாளர் கார்த்திக் மற்றும் சங்க நிர்வாகிகள். உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.