பொள்ளாச்சி : ஜூலை: 16
பொள்ளாச்சி அடுத்துள்ள பூசாரிபட்டியில் பொள்ளாச்சி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அரங்கில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி செயலாளர் ஜி. அருள்மொழி மற்றும்
முதல்வர் டாக்டர் D. கண்ணன் தலைமை தாங்கினர்
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி குழுமங்களின் தாளாளர் கே. மகேந்திரன் மாணவர்களிடையே வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார்..
நம்பிக்கையே அழகு என்ற தலைப்பில் அவர் பேசும்போது …..
இன்றைய காலகட்டத்தின் மாணவக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலகுவாக கிடைக்கிறது.
அதை நீங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.நம் வாழ்வில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என்று ஓடக்கூடாது .இங்கு வெற்றி என்பது ஒரு பெரிய விஷயமே கிடையாது .வெற்றி என்பது ஒன்று இல்லவே இல்லை.
வாழ்க்கையை அழகாய் வாழ வேண்டும் அவ்வளவுதான்.
ஒரு முறை வெற்றி பெற்றால் கடைசிவரை அந்த வெற்றியை தக்க வைக்க போராட வேண்டும் .ஆனால் ஒரு முறை தோற்றுப் போனால் வாழ்வில் லட்சம் முறை அந்த வெற்றியைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருப்போம் இதுதான் இயல்பு…
ஆகவே இங்கு யாருமே தோற்பதற்காக பிறந்த மனிதர்கள் கிடையவே கிடையாது ……
உங்களுக்கான ஒவ்வொரு நிமிடத்தையும் தவற விடாதீர்கள் வீணாக்காதீர்கள். அப்படி நாம் தவற விடுகிற அந்த ஒவ்வொரு நிமிடம் கூட மீண்டும் நமக்கு நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது என்று பல்வேறு கருத்துக்களை கல்லூரி மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார்.
கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின்
இறுதியில் முனைவர் .கே. பவித்ரா நன்றி கூறினார்.