நாகர்கோவில் மார்ச் 18
கடந்த டிசம்பர் மாதம் 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காஞ்சிரத்து கோணம், குரக்குடிவிளை பகுதியை சேர்ந்த பாலையன் என்பவரின் மகன் ஜாண்றோஸ்(63) என்பவர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பாலியல் குற்றவாளியான ஜாண்றோஸ் (63) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த ஒரு பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.