தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டுதருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் தலைமையில் கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு கையொழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தொடங்கி வைத்தார். உடன் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மலர்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
லோகநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.