ஈரோடு நவ 17
சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் கூட்டுறவுத்துறையின் சார்பில், “காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம்” என்ற தலைப்பில் சித்தோடு அரசினர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது மாவட்ட அளவிலான 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 2023-2024-ல் மாநிலத்திலேயே அதிகளவில் பயிர்கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது. இதில் ஏறத்தாழ 1069 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல 1212 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கூட்டுறவுத்துறையின் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாணவ, மாணவியர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கென மிகப்பெரிய அளவில் விளையாட்டு
மைதானம், நூலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான இதனால் ஒப்புதல் வரவில்லை. இதனால் அந்த விளையாட்டு மைதானம் நூலகம் அமைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களுக்கு மலைவாழ் படி வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் ஈரோடு மாவட்டத்தில் மலை பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்களுக்கு இந்த படி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுபற்றி முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .உடனே ஈரோடு மாவட்டத்திலும் தாளவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் 40 ஆண்டு கால கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டு, அவர்களுக்கு மலைவாழ்படித்தொகை வழங்குவதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டுறவுத்துறையின் சார்பில், இன்றைய பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கி பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் கூட்டுறவு வார விழா பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், த்ைதறி கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதித்துறை சங்கங்கள், சமூகநலத்துறை தொழிற் கூட்டுறவு சங்கம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை கூட்டுவறுவுகள், சிறப்பாக செயல்படும் தனிநபர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
முன்னதாக, அமைச்சர் கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினையும் பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குநர் செந்தமிழ்செல்வி மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.