ராமநாதபுரத்தில் ரோட்டரி மற்றும் கோஸ்டல் போனிக்ஸ் கிளப் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்
ஏ.எஸ்.பி. சிவராமன் துவக்கி வைத்தார்
போகலூர், அக்.13-
ராமநாதபுரத்தில் கோஸ்டல் போனிக்ஸ் மாராத்தான் ஓட்டம் சுமார் ஆயிரத்து நானூறு பேர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு குறித்து மாராத்தான் ஓட்டம் ஓடினர்.
ராமநாதபுரம் ரோட்டரி கிளப் கோஸ்டல் ஃபோனிக்ஸ் கிளப் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாபெரும் கோஸ்டல் போனிக்ஸ் மாராத்தான்-2024 ஓட்டம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானம் வழியாக சுற்றி வந்து மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்தப் மாராத்தான் ஓட்டம் 12 வயதுக்கு உட்பட்ட ஒரு பிரிவு 12 முதல் 18 வயது வரை உள்ள ஒரு பிரிவு மற்றும் சிறியவர் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்குமான பொதுப் பிரிவு என மூன்று பிரிவுகளாக மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாராத்தான் ஓட்டம் போட்டியை
ராமநாதபுரம் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ரோட்டரி கவர்னர் தேர்வு காந்தி ஆகியோர் முன்னிலையில் மாராத்தான் ஓட்டம் துவக்க விழா நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் ரவிச்சந்திரராமவன்னி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெகதீஷ், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சார்பில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த மாராத்தான் ஓட்டம் போட்டியில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், தர்மபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாராத்தான் ஓட்ட போட்டியில் மூன்று பிரிவுகளிலும் சுமார் 1400 பேர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டம் ஏற்பாடுகளை தலைமை கோச் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் வெகு சிறப்பாக செய்திருந்தார். மாரத்தான் ஓட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.