திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் உலக வன தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, விதைப்பந்துகளை மாணவ மாணவிகளுடன் இணைந்து தூவினார். அதன் பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் காடுகள் நமது கிரகத்தின் உயிர் நாடிகள், அவை மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆக்ஸிஜன், உணவு, மருந்து மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன. அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்திற்கு அப்பால், காடுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின் தூண்களாகும். மேலும் 2012 ஆம் ஆண்டு, காடுகளின் முக்கிய பங்கைக் கொண்டாடவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 21 ஆம் தேதியை சர்வதேச தினமாக அறிவித்தது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று, அனைத்து வகையான காடுகளையும் கொண்டாடவும், மரங்கள் மற்றும் காடுகளின்
முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உலக சர்வதேச வன தினத்தை கொண்டாடுப்பட்டு வருகிறது.
மேலும்
ஒவ்வொரு ஆண்டும் காடுகள் மீதான கூட்டு கூட்டாண்மை ஒரு புதிய கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “காடுகள் மற்றும் உணவு”. இது காடுகளுக்கும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது.
இந்தியாவில் காடுகள் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளன, மேலும் அவற்றின் பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல, ஒரு அடிப்படைப் பொறுப்பாகும்.
என்று கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க், வட்டாட்சியர் துரைராஜ். உட்பட. பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.