தூத்துக்குடி ஏப்.22
தூத்துக்குடி அருகே உள்ள கீழத்தட்டப்பாறை முதல் தெற்கு சீலுக்கன்பட்டி வரை, நெடுஞ்சாலை த்துறை சொந்தமான ரோட்டில் 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது, இதற்காக வனத்துறை மூலம் வேம்பு,புங்கை, மயிலை,ஆல் போன்ற மரக்கன்றுகள் தயார் செய்து பட்டது, சுமார் 500 மரக்கன்றுகளை இந்த வழித்தடங்களில் (ரோட்டில்) சென்னை ஐகோர்ட் நீதிபதியும் தமிழ் நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான சுந்தர் நடவு செய்தார். நல்ல முறையில் பராமரிப்பு செய்து மரங்களை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.இந்த மரக்கன்றுகளுக்கு கூண்டுகள் நன்கொடையாளர் மூலம் பெறப்பட்டது
இந்நிகழ்வில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் செயலாளருமான சுதா, முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வஷீத் குமார், கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா, கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், நெடுஞ்சாலை த்துறை தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், தூத்துக்குடி உதவி பொறியாளர் ஜெய ஜோதி, மற்றும் பணியாளர், நீதிமன்றத்தை சேர்ந்தவர்கள் , வழக்கறிஞர், துறை சார்ந்த அதிகாரிகள் திரளான பங்கேற்றனர்கள் இந்த ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் முதுநிலை உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா செய்திருந்தார்.