நாகர்கோவில் செப் 29
இந்திய அஞ்சல் துறையால் செப்டம்பர் 17 முதல் 2 அக்டோபர் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் மேற்பார்வையில்
தூய்மையே சேவை 2024ன் ஒரு பகுதியாக நேற்று நாகர்கோவில் தேஜஸ்வி குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக காப்பகத்தின் பொறுப்பாளர் செண்பகவள்ளி முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தின் முதன்மை அதிகாரி சுரேஷ் தலைமை தாங்கினார், மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் மற்றும் வணிக வளர்ச்சி அதிகாரி ராம்குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 25 மரக்கன்றுகள் காப்பக குழந்தைகள் மற்றும் பாதுகாவலர்களால் நடப்பட்டது.