சிவகங்கை ஆட்சியரிடம் மனு.
சிவகங்கை:ஏப்:05
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட குடும்பத்தினர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநிலச் செயலாளர் கருப்பையா மற்றும் பரஅழகன் அறக்கட்டளை நிர்வாகத்தினர் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினர்.
பின்பு செய்தியாளரிடம் தெரிவித்ததாவது : கழனிவாசல் கிராமத்தில் புல எண் 128 மற்றும் 154 வரை ஆதி திராவிடர் சமூகத்திற்கு அரசு ஆணை 1623 / 89ன் படி நிலங்களுக்கான பட்டா மற்றும் சர்வே எண்களில் உள்ள இடங்கள் ஆதியில் சேதுபதி மன்னர் ஆதி திராவிடர் மக்களான எங்களுக்கு
தானமாக வழங்கிய இடம். இந்த இடத்தை அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முற்படுகிறது.எனவே ஆதிதிராவிடர்களுக்கு உரிய இடங்களை ஆதிதிராவிடர்களுக்கே ஒப்படைக்க வேண்டும் . அதற்குரிய டாக்குமென்டுகள் எங்களிடம் உள்ளது. எனவே இந்த இடங்கள் அனைத்துமே எங்களுக்கு தேவை இருக்கும் போது தனியாரோ அல்லது அரசோ கையகப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளோம் எனவே மாவட்ட ஆட்சியர் கருணை கூர்ந்து மிகவும் பின்தங்கிய எங்களுக்கு சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய நிலத்தை எங்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.