திண்டுக்கல் ஜூலை: 5
வீரத்தமிழர் விளையாட்டு கழகம் மற்றும் பிரேவ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தமிழகத்தில் இருந்து பல்வேறு சமூகப் பணி செய்த பல சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திறனாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்பு அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் விஜி தலைமை தாங்கி விழா ஏற்புரை வழங்கினார்.
பிரேவ் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜோசப் செந்தில்குமார் விருந்தாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கலைக்கோட்டை கலை பண்பாட்டு மையத்தின் நிறுவனர் செ.ஜெரோம் அருள்ராயனுக்கு பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்தல், குழந்தைகள் இளைஞர்கள் முன்னேற்றம், குழந்தைகள் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் புகையிலைக்கு
எதிரான விழிப்புணர்வு பணி மற்றும் சமூக சேவையை தொடர்ந்து ஆற்றி வருவதற்கு சேவை சிகரம் விருதினை வீரத்தமிழர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் முனைவர்
யோகநாதன் வழங்கி பாராட்டி வாழ்த்தி சிறப்பு செய்தார்.
இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் நந்தா வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில்
வீரத்தமிழர் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் முனைவர் சரவணன் நன்றி கூறினார்.