சென்னை, நவ. 24,
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மாநகராட்சி
10வது மண்டலம் சார்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ‘ ஊட்டச் சத்தை உறுதி செய் “2 – ஆம் கட்ட துவக்கிவிழா சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-
2022 ஆம் ஆண்டு மாவட்ட வாரியாக ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் துவக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்டமாக இந்த ஆண்டு நவம்பர் 15ஆம்தேதி அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 76,705 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதை கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் 2,217 சைதாப்பேட்டை தொகுதியில் 46 நபர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 10வது மண்டல குழு தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி, மோகன்குமார் , மற்றும் மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் கிருஷ்ணவேணி, 10 வது மண்டல குழு மருத்துவ அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.