நாகர்கோவில், ஜூலை – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கக்கன் புதூர், காடேற்றி உள்ளிட்ட இரு கிராமங்களில் சுமார் 400 – க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் விவசாயம் அதிகம் உள்ள கிராமம் ஆகும். இப்பகுதி மக்கள் விவசாய பணிகள் தினக்கூலியாகவும் , வேலைகள் செய்து வருகின்றனர். இப்ப பகுதியில் உள்ள இவர்களின் குழந்தைகள் பள்ளி பயில அருகில் உள்ள பறக்கை ஊருக்கும், மேல்படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் நாகர்கோவில் நகருக்கும் தான் வர வேண்டும், சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலிருந்து காலை , மாலை என இரு வேளை 51 A என்ற பேருந்து இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் தான் தினசரி பள்ளி கூடங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தினமும் சென்று வந்தனர். இதே போன்று வயதானவர்கள் உள்ளிட்ட நோய் வாய் பட்டவர்களும் வயதின் மூப்பு காரணமாக மருத்துவ தேவைகளுக்காக நாகர்கோவிலில் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லவும் அரசு பேருந்துகளில் தான் சென்று வந்தனர் இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை அரசு போக்குவரத்து கழகம் முன் அறிவிப்பு இன்றி நிறுத்தி விட்டதாகவும் இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் நோய் வாய் பட்டவர்கள். உள்ளிட்ட இப்பகுதி கிராம மக்கள் பகல் நேரங்களில் தினசரி 8 மீட்டர் தூரம் நடந்து சென்று பறக்கை பகுதியில் சென்று பேருந்தில் ஏறி செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர். பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இரவு நேரங்களில் டியூசன் வகுப்பை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்லும் வழியில் தெருவிழக்குகள் இல்லாததால் வழிப்பறி சம்பங்களுக்கும், விஷ ஜந்துக்களுக்கு பயந்தும் தினசரி சென்று வர வேண்டிய சூழலில் தள்ளப் பட்டுள்ளனர் . எனவே இந்த கிராமங்களில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கேட்டு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில், நாகர்கோயில் மாநகர மாவட்ட செயலாளர் அல்- காலித் , நில உரிமை மீட்ப்பு இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் சசி, மற்றும் நிர்வாகிகள் ஆல்வின் , சதிஷ், வேல்முருகன், மற்றும் ஊர் மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . மேலும் இந்த கோரிக்கைகளை இதற்கு மேலும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.