நாகர்கோவில் – மார்ச் – 13,
கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்கேழ்ஸ் யூனியன் சிஐடியு சார்பாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பயணிகள்
ஆட்டோவில் பாரம் ஏற்று வதை தடுக்க கோரி சிஐடியு கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கேழ்ஸ் யூனியன் நித்திரவிளை மினி லோடு ஆட்டோ கிளை சார்பில் தலைவர் ராஜன், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை.
மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் பயணிகள் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதுஇது பொது மக்களுக்கு ஆபத்தை உருவாக்குவதோடு, மினி லோடு ஆட்டோ வைத்துள்ள தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
எனவே ஆபத்தான முறையில் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயணிகள் ஆட்டோவில் இரும்பு கம்பி,கட்டில்கள், தண்ணீர் டேங்குகள், பைப்புகள்,பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என பலதரப்பட்ட எடை அதிகமான பொருள்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கேழ்ஸ் யூனியன் சிஐடியு பதிவு எண் 376 கே.கே.எம் நித்திரவிளை மினி லோடு ஆட்டோ கிளை சார்பில் தலைவர் ராஜன், செயலாளர் மைதாஸ் ஆகியோர் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.