திருப்பூர் ஜூலை: 30
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முதல் எம்எல்ஏவும் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ண குடும்பர் வாழ்ந்த வீடு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம் அம்மாபட்டி கிராமத்தில் சேதம் அடைந்து உள்ளதால் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இடமாக மாற்றி தர கோரியும் உடுமலைப்பேட்டையில் கிருஷ்ண குடும்பர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரியும். தாராபுரத்தில்
இயங்கிவரும் கார்பன் மேக்ஸ் பிரைவேட் கம்பெனி அரசு அனுமதி அளித்த அளவைவிட கார்பன் அதிகமாக வெளியேற்றுவதால் சுற்றுப்புற கிராம மக்கள் பெரும் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன இதனை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், தலைமையில் மாவட்ட தலைவர் ஸ்டீபன் இணைச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் கல்லாபுரம் பாலு, மற்றும் ராஜா, கனிமொழி, மற்றும் கட்சி நிர்வாகிகள்
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.