நாகர்கோவில் ஜன 31
ஆதித்தமிழர்கட்சியின் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் வகுப்பை சார்ந்தவர்கள் வகுப்பு சான்றிதழ் வழங்க கேட்டு நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அழித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
கன்னியாகுமரி பேருராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கர் காலனியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் காட்டுநாயக்கர் வகுப்பு சான்றிதல் பெறுவதற்கு தந்தையின் சான்றிதல் இருந்தும் ஆன்லைனில் முலம் பதிவு செய்தும். மாவட்ட நிர்வாகத்துறை தொடர்ச்சியாக எங்கள் விண்ணப்பத்தை ரத்து செய்து வருகிறது. எங்களுடைய பள்ளி சான்றிதழில் சமூகத்தின் பெயர் இருந்தும் மாவட்ட நிர்வாகத்தால் எங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. இதனால் எங்கள் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு, பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் முறையாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய வகுப்பு சான்றிதழ் காலதாமதம் இன்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன் மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் குமாரவேல். கார்த்திக் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.