நாகர்கோவில் – ஜன – 23,
கன்னியாகுமரி மாவட்டம் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் இரத்னம்நாடார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகளாவன :-
பறக்கைப் பகுதியில் நடைபெற்று வரும் சுமார் 1700 ஏக்கர் நெல் விவசாயத்தை பாதுகாத்திடும் பொருட்டு நாகர்கோவில் சபரி அணையில் இருந்து செல்லும் 6 கி.மீ நீளம் கொண்ட பறக்கின் கால்வாயை புனரமைத்திடவும், நன்னீர் ஆதாரத்தை ஏற்படுத்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் , அனந்தனாறு கால்வாயில் இருந்து பிரிந்து பெரு விளை, ஆசாரிப்பள்ளம், பாம்பன் விளை வழியாக செல்லும் ஏ.என். குடி கால்வாயை (ஆசாரிபள்ளம்) போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து தண்ணீர் விட வேண்டும், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்தும் வகையில் , உரிய பராமரிப்பின்றி அழிந்தும் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டும் காணப்படும் பாரம்பரிய நீருற்று களை மீட்டு, தூர்வாரி, பக்க சுவர் எழுப்பி பாதுகாத்திட உடனடி நடவடிக்கை எடுத்திடவும் கேட்டு குமரி மாவட்ட நீராதாரங்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . இதில் இயக்க செயலாளர் பவுல்ராஜ், துணைத்தலைவர்கள் சுரேன் ஜோயல், ரவீந்திரன், துணை செயலாளர்கள் தங்கசுஜன், என்.எஸ். கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. உடன் உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன். ராஜாசிங், ராஜலிங்கம், ஸ்ரீராம், ராஜகுமார் , குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.