திண்டுக்கல்
ஜூலை: 5
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பு பெறுதல், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல், சொத்து வரி பெயர் மாறுதல் செய்தல் , புதிய சொத்து வரி விதித்தல், சுகாதாரம் தொடர்பான குறைகள் மற்றும் இதர அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றை உரிய ஆவணுங்களுடன் விண்ணப்பித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இந்த குறை தீர்க்கும் முகாமில் சமூக ஆர்வலர் ஹெச்.ராஜேஷ் கண்ணன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது , திண்டுக்கல் மாநகர பகுதிக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். இயற்கை உபாதைகளை கழித்திட இட வசதி இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி உதவியால் காந்தி மார்க்கெட் முகப்பு, சென்ட்ரல் தியேட்டர் ரோடு,
ஜி.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் மதுரை ரேக் முன்பு ஆண், பெண் இரு பிரிவுகளாக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தியிருந்தனர். இதன் திறப்பு விழாவும் நடைபெற்றது. ஒருநாள் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. எந்த அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. லைட் வசதி இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் திறக்காத நிலையிலும் இரவு நேரம் மட்டும் கதவுகள் திறந்து இருப்பது ஏன்? இதனால் முறையான பராமரிப்பும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.