ஜூலை 30
ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க சார்பில் தலைவர் சந்திரன் செயலாளர் மூர்த்தி பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சுகுமார் என்பவருக்கு சொந்தமான TN.04.AX 3349 என்கின்ற என் உள்ள டிப்பர் வாகனம் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கிராவல் குவாரியில் தாராபுரம் வட்டம் நாதம்பாளையம் கிராமம் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் எஸ் ஆர் குரூப் ராஜா என்பவர் மூலமாக கிராவல் ஏற்றி வந்த வண்டியை திருப்பூர்
கனிமவளத்துறை ஏஜி வெங்கடேஷ் அவர்கள் தணிக்கை செய்த போது பர்மிட் இருந்தும் இல்லை என்று கூறி நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து வண்டியை பறிமுதல் செய்துள்ளார் உரிய ஆவணம் இருந்தும் வண்டியை வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது சம்பந்தமாக குவாரி உரிமையாளரையும் வரதராஜ்
மற்றும் எஸ் ஆர் குருப் ராஜா ஆகியோரை விசாரித்து தவறுதலான புகாரை மறுபரிசீலனை செய்து பின்பு வாகனத்தை விடுவிக்க ஆவணம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக கோரிக்கை மனு வழங்கினார்கள் இதில் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.