கோவை பிப்:28
கோவை மாநகராட்சி பிராதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட இணை செயலாளர் பூ மார்க்கெட் சரவணன் ஆகியோர் தலைமையில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் சிவ குரு பிரபாகரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் தெரிவித்ததாவது குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி வார்டு எண் 87-க்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் பொது மக்களின் நீண்டகால கோரிக்கையான 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 2 ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் உபயோகமின்றி உள்ளது.
புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்தும் சிதளமடைந்தும் அவல நிலையில் உள்ளது.சுகாதார நிலையம் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது, இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் காந்தி நகரில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குனியமுத்தூர் பகுதி செயலாளர் பைசல்,ரகுமான், சித்திக், சாதிக், ஹரிஹரன், தாஜுதீன், உமர் பாரூக் விக்னேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி,பகுதி செயலாளர்,87வது வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.