அரியலூர், செப்;04
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து காவல்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு வகையில் மணல் திருட்டை மணல் திருடர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். மணல் திருட்டு நடக்கும் இடங்கள் சிமெண்ட் ஆலை ஒட்டியே உள்ள வெள்ளாற்றில் அதேபோன்று ஆலை கம்பெனி கிரஷ்சர் ( ஆனைவாரி ஓடைதரைபாலம்) அருகில் மாட்டு வண்டிகள் மூலம் இந்த மணல் அடித்து சேமித்துவைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு ஒரு லோடு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க நிரந்தரமான பறக்கும் படையை மாவட்ட காவல் துறையும் வருவாய் துறையும் உருவாக்க வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆற்றில் இறங்கும் பாதைகளில் குழிகளை வெட்டி ஆற்றில் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல குறிப்பிட்ட சில இடங்களில்பெரும் கற்களைக் கொட்டி கரைகளை பலப்படுத்தினாலும் வண்டிகள் ஆற்றில் இறங்குவதை தடுக்க முடியும். இது போன்ற முயற்சிகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் கட்டுபாட்டில்உள்ள நிலத்திலிருந்து தொடர்ச்சியாக செம்மண் திருடப்பட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் ரோந்து பணியை தீவிரப்படுத்தி காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்