சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா கோரிக்கைமனு அளித்தார்
அம் மனுவில் வாசுதேவநல்லூரைச் சுற்றி 12 கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட ஏழை எளிய பள்ளி மாணவர்கள் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர் பள்ளிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணி நாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புஞ்சை சர்வே எண் 30/3 ஏக்கர் 3.87 நிலத்தை 1972 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் மாணவியர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றன குத்தகை தொகை கோயில் நிர்வாகத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது இதே இடத்தில் கோவில் நிர்வாகம் திருவிழா காலங்களில் பொருட்காட்சி கண்காட்சி கடைகள் அமைப்பதற்கும் பயன்படுத்தி வாடகை வசூல் செய்துள்ளது பள்ளி செலுத்த வேண்டிய குத்தகை தொகை யை கழித்து மீதி தொகையை வாங்குவதற்கு கோவில் நிர்வாகம் மறுக்கிறது குத்தகை தொகையை வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு போதுமான வருமானம் இல்லாததால் காலதாமதமாகியது தற்போது கோவில் நிர்வாகம் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பள்ளி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்று முறையிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆகவே அமைச்சரவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் இடத்தை பள்ளிக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கும்படியும் மாறாக ஈடாக வேறு ஒரு நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.