ஈரோடு மே 28-
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை சார்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கட்டிடக் கலைக் கல்லூரி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய 7 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில், ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5 சதவீதம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பெருந்துறை பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை இணை ஆணையர் ஆதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ 3.98 கோடி அளவிலான கல்வி ஊக்கத்தொகையினை 1153 மாணவர்களுக்கு வழங்கி பேசினார். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் குமாரசாமி செயலாளர் சத்தியமூர்த்தி பொருளாளர் ரவிசங்கர் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.