நாகர்கோவில் அக் 6
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் சுவாமிக்கு உகந்த மாதமாகும். இதனை முன்னிட்டு புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானங்கள் நடைபெற்று வருகிறது. இந்நாளில் பொதுமக்களும், பக்தர்களும் இத்திருக்கோயிலுக்கு அதிகாலை முதலே பெருந்திரளாக வந்து பெருமாளை வழிபட்டு செல்வார்கள். இத்திருக்கோயிலுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பனர் என்.தளவாய்சுந்தரம் வந்தார். அவரை மாநகராட்சி உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியன், அக்சயா கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை பெருமாள் சுவாமிக்கு பரமேஸ்வரன் போற்றி, மணிகண்டன் போற்றி ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தளவாய்சுந்தரத்திற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெருமளவில் பக்தர்களும், பொதுமக்களும், பெண்களும் பெருமாள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், பெருமாள், ஹரி, அருணா, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.