கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடுப்பு தினம் மற்றும் சர்வ தேச குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் நடைப்பயணம் (Walk For Children) விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு,.வர்கள்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடுப்பு தினம் மற்றும் சர்வ தேச குழந்தைகள் தினம் ஆகியவை முறையே 14 நவம்பர், 19 நவம்பர் மற்றும் 20 நவம்பர் ஆகிய தேதிகளில் கடைபிடிப்பதைத் தொடர்ந்து குழந்தைகள் நடைப்பயணம் (Walk For Children) என்ற பெயரில் பொது மக்கள் மற்றும் துறை சார் அலுவலர்களின் குழந்தைகளிடமான அவர்தம் பொறுப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள், சட்டங்கள், திட்டங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் நலக் குழுமம், காவல்துறை மற்றும் குழந்தை சார் துறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
இப்பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி பெங்களூர் சாலை வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் வழிநெடுக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதியமான் கலைக் குழு மூலம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது பேரணியில்.St Joseph School of Nursing, PSV Nursing College, Sri Vijay Vidhalya Nursing College o Ray Institute of Hotel Management & Paramedical Science ஆகிய கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300 மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர்கள் மற்றும் இதர குழந்தைகள் சார் துறையை சோர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பேரணிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .த.சரவணன், வட்டாட்சியர் .வளர்மதி, பாதுகாப்பு அலுவலர்கள் (நிறுவனம் சார்) .க.சுபாஷ், .க.கஸ்தூரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.