ஈரோடு மார்ச் 27
பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு இயக்கம் சார்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.துணை தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக அமையும் மாஸ்டர் பிளானில் 12.66 ஏக்கர் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தி உள்ளது. இது ஏற்கனவே உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் டி டி பிளானில் 80 அடி திட்டச்சாலை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் தற்போது வரைவு நிலையில் உள்ள ஈரோடு மாஸ்டர் பிளானில் அதை மறைக்கப்பட்டும் 80 அடித்திட்ட சாலை நீக்கப்பட்டும் உள்ளது.
மேலும் 80 அடி சாலையை உள்ளடக்கிய 12.66 ஏக்கர் நிலத்தை அரசு நிலம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சிஎஸ்ஐ இன்சிடியூஷன் என குறிப்பிடப்பட்டு மாஸ்டர் பிளான் 2047 வரைபடமானது முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது
குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் ஆலோசகர் சண்முகசுந்தரம்,ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ,பொது செயலாளர் சரவணன்மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு ஆலோசனை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics