வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் பெரி திறந்தவெளி கலை அரங்கில் நடை பெற்ற “கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு நாள் விழா” வெகுசிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பெரி கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மாண்பமை சரவணன் பெரியசாமி அவர்கள் தலைமையேற்று விழாவை தொடங்கிவைத்தார். பெரி கல்விக் குழும தலைமை இயக்க நிர்வாக அலுவலர் சசி வீரராஜன் அவர்கள் மற்றும் பெரி கலை அறிவியல் கல்லூரி, கல்வி இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அ.புருஷோத்தமன் அவர்கள் வரவேற்று கல்லூரி நாள் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
விழாவில் சென்னைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர். C. அருள்வாசு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைகழக.தேர்வு கட்டுபாட்டுத்துறை இயக்குனர் அருள்வாசு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் பெரி கல்லூரியில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த பேராசியர்களுக்கும் கல்லூரி சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைகழக தேர்வு கட்டுபாட்டு துறை இயக்குனர் அருள்வாசு மாணவர்களிடம் பேசும்போது, நடிகர் அஜித் போல் எதிலும் விடா முயற்சியாக இருந்தால் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறமுடியும். மேலும் படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி கடின உழைப்பு நிச்சயம் வெற்றி கொடுக்கும் என்றார்.
உடற்கல்வி ஆசிரியர் முனைவர். பத்மநாபன் விளையாட்டு போட்டி ஆண்டு அறிக்கையை வாசித்தார் இந்நிகழ்வில் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.