தஞ்சாவூர் செப்.25
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்ட மாற்றம் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்களை பொதுமக்கள் ஆட்சித் தலைவரிடம் அளித்தனர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் பயிற்சி உதவி ஆட்சி தலைவர் உத்கர்ஷ்குமார் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.