நாகர்கோவில் அக் 10,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், கன்னியாகுமாரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.