Lorem ipsum dolorமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் .
மாவட்ட அளவிலான சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் 9 நபர்களுக்கு ரூ.54 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 437 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 67601 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக, மாவட்ட அளவிலான சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் 9 நபர்களுக்கு ரூ.54 ஆயிரத்துக்கான காசோலைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பதிவுபெற்ற 3 உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, சூளகிரி வட்டத்தைச் சேர்ந்த 100 நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.மேலும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க மேம்பாட்டு நிறுவனம் சார்பாக, மாநில அளவில் நடத்தப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பெத்தபேளகொண்டப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 5 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் உயர்கல்வித்துறை மாணவர்களுக்கான ஹேக்கத்தான் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயிலும் 4 மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சிர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .சுந்தராஜ், ஆவின் பொதுமேலாளர் மரு.சுந்தரவடிவேலு, தொழிலாளர் நல உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.