வேலூர்_04
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (02.12.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்களிடம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் மனு வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு நீ செந்தில்குமரன் மகளிர் திட்ட இயக்குனர் திரு உ. நாகராஜன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு இரா. பாலசுப்பிரமணியன் மாவட்ட ஆதி திராவிட நலதுறை அலுவலர் திரு இரா. ராமச்சந்திரன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி சீதா மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சுமதி உதவி இயக்குனர் ஊராட்சிகள் செல்வி உமா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.