நாகர்கோவில் ஆக 20
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 593 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சென்னை மாவட்டம் அயனாவரம் வட்டம், திருவள்ளுர் நகர். சோலையம்மன் கோவில் தெருவைச்சார்ந்த ரியாஸ்அலி என்பவர், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமத்தை சார்ந்த தனது நண்பரின் மகள் திருமணத்திற்கு வந்தபோது பெருந்தலைக்காடு துவச்சி சட்டர் பகுதியில் குளிக்க முற்பட்டபோது 18.05.2024 அன்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு உயிரழந்தார். அவரின் வாரிசுதாரான அன்னாராது மனைவி பயாஸ் உன்னிசா என்பவருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 15.4 இலட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்,
தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர்கள் சுகிதா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பொதுமக்கள் உட்பட
பலர் கலந்து கொண்டார்கள்.