

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் சங்கரன் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் எஸ் பொன்னப்பன் ஆகியோர் தங்களுடைய இருபது வருடப் பனி காலத்தில் விபத்து ஏற்படாமல் மாசற்று பணிபுரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அஷ்தகிரியூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் எதிர்பாராத விதமாக ஊட்டமலை காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தமைக்கு அவரின் தந்தை கோவிந்தசாமி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ஒரு லட்சத்திற்கான காசோலை இணை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்