தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் சபா கூட்டம்: மேயர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக மக்கள் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் அவர்கள் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் கலந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று புதன்கிழமை காலை வடக்கு மண்டல அலுவலகத்தில் பகுதி சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. இதில் வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேயரிடம் மனு அளித்தனர்.உடன் மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், துணை ஆணையர், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் , மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்தி மதி, ஜெயசீலி , கற்பக கனி,மரியோ சுதா, சுப்புலட்சுமி,பவானி நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர் ஆணையர் நேர் முக உதவியாளர் துரைமணி, மண்டல பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.