தஞ்சாவூர் ஜூன் 13.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடங் கியது . நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களவைத் தேர்தல் நடத்தி விதிமுறைகள் நடைமுறை யில் இருந்ததால் ஏறத்தாழ இரண்ட ரை மாதங்களாக நடைபெற வில்லை.தேர்தல் நடத்தை விதி முறைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ,தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 257 மனுக்கள் வரப்பட்ட ன.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தீ விபத் தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து பெண்ணுக்கு நுரையீரல் பாதிக்கப் பட்டதை தொடர்ந்து அவரது தொடர் சிகிச்சைக்காக ஆக்சிஜன் செறிவூ ட்டியும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூபாய் 1.76 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் ஒரு மாணவனுக்கும், சக்கர நாற்காலி ஒருவருக்கும் காதொலி கருவி ஒருவருக்கும் வழங்கப்பட்ட ன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்