நாகர்கோவில் செப் 4
குமரி மாவட்டதில் வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி அஞ்சல் துறையின் சேவை குறைகளை தெரிவிக்க அஞ்சல் சேவை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொள்ள கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 10.09.2024 அன்று 11.00 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் (அல்லது) தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – செப்டம்பர் 2024 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். 05.09.2024.ம் தேதி புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.