தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
பின்னர் மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகரட்சியில் கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய 400 காலி மனைப்பகுதிகளில் அதன் உரிமையாளர்க்ள மணல் நிரப்பி வருகின்றனர். இதுபோல் காலி மனைகளில் குப்பை கொட்டுவதும் குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள 8 ஆயிரம் சாலையோர கடைகள் மூலம் அதிகளவில் கேரி பைகள் புழங்குகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பி அன் டி காலனியில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இளைப்பார சாலையோர பூங்காக்கள் அமைக்கப்படும். பாளை., ரோட்டில் உள்ள ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கூட்டத்தில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்கள்.