திருநெல்வேலி, டிச.3-
மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிறுவனர் கருப்பையா வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி சகுந்தலா ஓட்டலில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உச்சிக்காட்டான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநில இணை செயலாளர் தேவேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சி ஊழியர்கள் நமது சங்கத்தில் இணைந்து மாநகராட்சி துறையில் சங்கத்தின் நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தேவேந்திரன் ( BSP ) கலந்து கொண்டார்.
இந்தாண்டு முதல்
01.01.25 அனைத்து துறைகளும் புதிய நிர்வாகிகள் சேர்ப்பது ,
இந்த ஆண்டு முதல் உறுப்பினர்கள் அனைவரிடமும் ஆண்டு சந்தா வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் போக்குவரத்துறை , கல்வித்துறை, வருவாய்த்துறை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செல்லத்துரை நன்றி கூறினார்.