தேனி ஆக – 08
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியான தே.சிந்தலைச்சேரியில் உள்ள புதிய சிவிஎஸ் சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை,காவல்துறை,கூட்டுறவுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட 17 வகையான அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தே. சிந்தலைச்சேரி,மேல சிந்தலைச்சேரி, உ.அம்மாபட்டி,பல்லவராயன்பட்டி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்தனர்.இந்த முகாமில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி,உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி,ரவிச்சந்திரன் ஒன்றிய குழு தலைவர் இன்பெண்ட் பணிமய ஜெப்ரின் மேல சிந்தலைச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், உ.அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நாகராஜ், தே.சிந்தலைச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி அருளானந்த பாக்கியம்,பல்லவராயன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சுந்தர், கவுன்சிலர்கள்,தி.மு.க நிர்வாகிகள்,அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.