நீலகிரி. நவ.21.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம் பகுதியில் இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அடர் வனப் பகுதியான குஞ்சப்பனை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மூன்று நாட்களாக மின் வசதி இன்றி அப்பகுதி மக்கள், படிக்கின்ற மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக இருள டைந்து கிடப்பதால் கரடி, யானை, சிறுத்தை , மற்றும் விஷப்பாம்புகள் குடியிருப்புகளில் வருவதால் இம்மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அப்பகுதி மக்களுக்கு மின்வாசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.