நாகர்கோவில் ஜூன் 25
கன்னியாகுமரி மாவட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட முருங்கைவிளைப் பகுதியில் உள்ள ஊர் மக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது :- வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட முருங்கை விளைப் பகுதியில் குறுகிய சாலையில் அதுவும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த பகுதிகளில் மணல், உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கனிம வளங்களை அரசு அதிகாரிகளின் துணையோடு தனியார் நிறுவனதினர் செய்து வருகிறார்கள். இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தனியார் நிறுவனம் குண்டர்களைக் கொண்டு ஊர் மக்களை தாக்க வருவதாகவும் கனிம வள அதிகாரிகள் ஆதரவோடு அவர்கள் மணல் கடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஊர் மக்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர் கனிம வள கடத்தல் கும்பலை தடுக்கவில்லை என்றால் வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினார்கள்.