தஞ்சாவூர். டிச.9.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் சரவணன் அனைவரையும் வரவேற்றார் முன்னாள் படைவீரர் நலத்துறை யில் செயல்படுத்தப்படும் நலத் திட்ட உதவிகள், பயிற்சிகள் போன்ற விவரங்களை எடுத்துரைத்தார்.
பின்னர் ரூபாய் 10 லட்சத்து 10 ஆயிரத்து,406 மதிப்பிலான கல்வி உதவித் தொகை,வங்கி கடன், வட்டி மானியம் ,தட்டச்சு மானியம், மருத்துவ நிதி உதவி என 44 பேருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்
அப்போது அவர் கூறியதாவது கடந்த ஒராண்டில் முன்னாள் படை வீரர், சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 610 பேருக்கு ரூபாய் 1கோடியே 67 லட்சத்து 73 ஆயிரத்து 928 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது .கடந்த 2023ம் ஆண்டில்
கொடி நாள் வசூலாக ரூபாய்1 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூபாய் 1 கோடி 76 லட்சத்து 69 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது இது 87 சதவீதம் ஆகும் .கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மாவட்ட அலுவலர்கள் வசூல் செய்ய வேண்டும். பொது மக்கள் அதிகளவில் கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து கொடி நாள் நிதிவழங்கி தொடங்கி வைத்தார் விழாவில் உதவி ஆட்சித் தலைவர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் ஜெயக்குமார், முன்னாள் படை வீரர் நலத்துறை கண்காணிப்பாளர் சுகுமார் ,முப்படை அதிகாரிகள்,
கொடி நாள் வசூல் செய்த மாவட்ட அலுவலர்கள், முன்னாள் படை வீரர்கள் அவர்களை சார்ந்தோர்கள் கொண்டனர்.