திருப்பூர்: மார்ச்:3 மாவட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்த்துராஜ் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை மருத்துவர் விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் ஆறுச்சாமி, பாலமுருகன் மற்றும் ஸ்டாலின்பிரபு ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் உணவகங்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்தி பொட்டலம் இட்டு விற்பனை செய்யும் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பதப்படுத்தும் நிலையங்களில் செயல்படக்கூடிய குளிரூட்டிகள் போதுமான உரைநிலையில் உள்ளனவா எனவும் பொட்டலமிடப்பட்டகாலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையங்களின் சுகாதாரம் அங்கு பணி செய்யக்கூடிய பணியாளர்களின் தன்சுத்தம் மருத்துவ பரிசோதனை சான்று மற்றும் கொள்முதல் விற்பனை பதிவேடுகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக சிக்கன் மற்றும் மட்டன் வகைகளை பதப்படுத்தும் பொழுது மைனஸ் 4 டிகிரி செல்சியஸில் இறைச்சிகளை முறையாக பதப் படுத்தவும் முறையான உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற பணியாளரின் மூலமாக சிக்கன் மற்றும் மட்டன் வகைகளை ப்ராசஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிக்கன் மட்டன் வகைகளை குளிரூட்டியில் வைக்கும் பொழுது குளிரூட்டியின் உரைநிலையை உறுதி செய்யும் விதமாக பராமரிப்பு பதிவேடு வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு தயார் செய்யும் இடம் ரத்தக்கரைகள் இல்லாத வாறும் துர்நாற்றம் இல்லாதவாறு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆய்வின் போது பொட்டலமிடப்பட்ட சிக்கன் மற்றும் மட்டன் வகைகள் காலாவதியான நிலையில், முறையற்ற நிலையில் பதப்படுத்தப்பட்ட உட்கொள்ள தகுதியற்ற சுமார் 75 கிலோ அளவிலான இறைச்சியானது இறைச்சி கடையிலிருந்தும் சுமார் 7கிலோ அளவிலான சமைத்த கெட்டுப்போன, உட்கொள்ள இயலாத இறைச்சியானது உணவகத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
மேலும் உணவகங்களில் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொள்முதல் பதிவேடு மற்றும் ஸ்டாக் ரெஜிஸ்டர் ஆகியவற்றை பராமரிக்க உத்தரவிடப்பட்டது. பணியாளர்கள் தன் சுத்தம் பேணவும் மருத்துவ சான்றிதழ்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெறவும் அறிவுறுத்தப்பட்டது, மேலும் உணவு பாதுகாப்பு பயிற்சிபெற்ற ஒருவரை கொண்டு மேற்பார்வை செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிக்கன் , மட்டன் வகைகளை அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும் அவற்றை இருப்பு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்புச் சட்டம் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்ட இரண்டு கடைகளின் மீது அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு உணவு பாதுகாப்புச் சட்டம் அதன் விதிகளுக்கு முரணாக செயல்படக்கூடிய உணவு கடைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பிலோ அல்லது உணவு பாதுகாப்பு குறை தீர்ப்பு செயலி மூலமாகமோ புகார் தெரிவிக்கலாம் என்றும் நுகர்வோர்களாகிய பொது மக்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.