மார்த்தாண்டம் டிச 22
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் துறையினர் அதிக ஒலி எழுப்பும் (அங்கீகரிக்கப்படாத) சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம்,பதிவு எண் இல்லாமல் ஒட்டி வந்த வாகனம், அதிவேகமாக வந்த வாகனம்,லைசன்ஸ் இல்லாமல்,தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த வாகனம் உட்பட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
நல்லசிவம் மேற்பார்வையில், மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் காவலர்கள் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்த வாகனம்,லைசன்ஸ் இல்லாமல் ஓட்டி வந்த வாகனம்,அதிவேகமாக வந்த வாகனம், பதிவு இல்லாமல் ஓட்டி வந்த வாகனம், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனம் உட்பட வாகனங்களுக்கு
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு அபராதம் கட்டிய பின்பு ரசீது கொடுத்து தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.