மார்த்தாண்டம் பிப். 15-
மார்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
பொது மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரம் ஆணைப்படி மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வந்த உணவகத்தில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மார்த்தாண்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்
ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அந்த கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.