நாகர்கோவில் ஜூன் 13
விழிப்புணர்வு அதனை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஆட்டோ ஓட்டுநர்கள். ஆகவே நடவடிக்கையில் இறங்கிய போக்குவரத்து போலீசார்.
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தர வதனம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டுவது மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார் . எனவே மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், வாகனங்களில் செல்வோர்களிடத்திலும் மேற்கொண்டது மட்டுமல்லாமல், தலைக்கவசம் அணியாமலும் , சாகசங்களில் ஈடுபடுபவரிடத்திலும், ஒரு வழிச்சாலையில் வருவோரிடத்திலும், அதிகாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டுனர்களிடமும், அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்களின் ஓட்டுனர்களிடமும் சாலை விதிமுறைகளை பற்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை இயக்குவது குறித்தும் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
தற்போது கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கி உள்ளதால் ஆட்டோ மற்றும் வேன்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாகனங்களுக்கு தகுந்தாற்போல் அனுமதிக்கப்பட்ட அளவிலான குழந்தைகளை மட்டுமே ஏற்றி வர வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் வாகனங்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்டரின் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் காலை முதலே கோட்டார் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டும் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை சோதனை செய்தும் வந்தனர். அப்போது மூன்று ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை அழைத்து வந்ததை கண்டுபிடித்து அந்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இனி வரும் நாட்களில் அரசு அனுமதி வழங்கியதை விட அளவுக்கு அதிகமான குழந்தைகளை அழைத்து வந்தால் ஓட்டுனர் உரிமம், மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது மட்டுமல்லாமல்
சாலை விதிமுறைகளை குறித்த விழிப்புணர்வை மீண்டும் அவர்களுக்கு ஏற்படுத்தினர்.