மதுரை ஜூலை 8,
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். காவல் துணை ஆணையர் மதுரை தெற்கு (சட்டம் ஒழுங்கு) கருண்கரத், மேற்கு வட்டாட்சியர் செந்தாமரைவள்ளி ஆகியோர் உடன் உள்ளனர்.