மதுரை ஜூலை 21,
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வம் 62 இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது இதனால் அவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு விரல் அகற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டவர்.ஏற்கனவே அவருக்கு விரல்கள் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட புண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அங்குள்ள ஜன்னல் கம்பியில் படுக்கை விரிப்பு மூலம் நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்