தருமபுரி : நவ.06
தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி,கே, மணி தலைமையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த செய்தி அறிந்த வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு சென்று செல்லத்துரையின் குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதைக் கண்டிப்பதாகத் கூறி கடந்த 4-ஆம் தேதி புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இப்படியாக புவனகிரி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேசிய பேச்சுகள் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பொது அமைதியை குலைக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
எனவே, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் அவர் பேசினார்.
இந்நிகழ்வில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் வ.பிரகாஷ், பெ.சேட்டு, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, பாமக மாநில துணை தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி.செந்தில், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம், மாவட்ட தலைவர்கள் எம்.செல்வகுமார், கு.அல்லிமுத்து மற்றும் மாநில, மாவட்ட, நகர,பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.